ராணிடெக் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பினை கலெக்டர் தொடங்கி வைத்தார்
- உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழா நடந்தது
- சுமார் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிடெக் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பூஜ்ய கழிவுநீர் புதிய சமன்படுத்தப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து ராணிடெக் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
ராணிடெக் தலைவர் ரமேஷ்பிரசாத் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ஜபருல்லா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் இணை தலைமை பொறியாளர் ராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிசந்திரன் ஆகியோர் பேசினார்.
நிகழ்ச்சியில் ராணிடெக் பொது மேலாளர் சிவகுமார் உலக சுற்றுச்சூழல் தினவிழா உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தோல் பதனிடும் அங்கத்தினர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொது மேலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.முன்னதாக ராணிடெக் நிலைய வளாகத்தில் 250 மரக்கன்றுகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நட்டார்.