உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் வசதி
- காட்டில் இருந்து வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை
- 10 ஹக்டேர் பரப்பளவில் காடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் மொத்தம் 10 ஹக்டேர் பரப்பளவில் காடுகள் பராமரிக் ப்பட்டு வருகின்றன. இங்கு, பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது, கோடை காலத்தில் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேடி விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக, மான்கள் காடுகளை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவது தொடர்கிறது. கோடை காலத்தில் வனவிலங்குகளின் மேலும், மான்கள் கூட்டம்வெளியேறுகிறது.
பாணாவரம் காப்புக் காட்டில் வன விலங்குகள் தாகத்தை தீர்க்க, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.