உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

முல்லைபெரியாற்றில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Published On 2022-10-06 05:51 GMT   |   Update On 2022-10-06 05:51 GMT
  • வாலிபரின் உடலை தேடுவதற்காக நேற்று அணையிலிருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்த ப்பட்டது.
  • உடல் கண்டெடுக்கப்பட்ட நிலை யில் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது.

கூடலூர்:

தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் இந்த வருடம் 136 அடிக்கு மேல் சென்றது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட ங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மழை அதன்பிறகு படிப்படியாக குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் சரிய தொடங்கியது.

இருந்தபோதும் அணை யிலிருந்து முறை வைத்து பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு முல்லைபெரியாற்றில் அடித்து கொலை செய்ய ப்பட்டு வீசப்பட்ட வாலிபரின் உடலை தேடுவதற்காக நேற்று அணையிலிருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்த ப்பட்டது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலை யில் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது.

அணையின் நீர்மட்டம் 129.10 அடியாக உள்ளது. வரத்து 484 கனஅடி, திறப்பு 1400 கனஅடி, இருப்பு 4504 மி.கனஅடி.

வைகை அணையின் நீர்மட்டம் 68.01 அடியாக உள்ளது. வரத்து 554 கனஅடி, திறப்பு 1349 கனஅடி, இருப்பு 5322 மி.கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 120.14 அடியாக உள்ளது.

Tags:    

Similar News