உள்ளூர் செய்திகள்
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட உளுந்து- பாசி பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்- விவசாயிகள் சங்கக்கூட்டத்தில் தீர்மானம்
- புதியம்புத்தூர் அருகே உள்ள குறுக்கு சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு நடந்தது.
- பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதியம்புத்தூர்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு புதியம்புத்தூர் அருகே உள்ள குறுக்கு சாலையில் நடந்தது. ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பொறுப்பு கிருஷ்ணமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் லெனின் பழ மாணிக்கம் ஆகியோர் பேசினர். இதில் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டு உளுந்து, பாசிப்பயறு ஆகிய பயிர்கள் மஞ்சள் நோய் தாக்கியதால் போதிய விளைச்சல் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே மத்திய -மாநில அரசுகள் உடனடியாக இப்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி சந்தனம் நன்றி கூறினார்.