உள்ளூர் செய்திகள்
டவுன் பஸ் நிறுத்தத்தில் போஸ்டர்கள் அகற்றம்
- 23-வது வார்டு பகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணிகள் நடைபெற்றது
- பஸ் நிறுத்தம் பகுதியில் ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் விதமாக கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் பேரில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படியும் உதவி கமிஷனர் வாசுதேவன் ஆலோசனையின் பேரிலும் நெல்லை மண்டலம் அலகு எண் 3-க்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணிகள் நடைபெற்றது. அதன்படி டவுன் காட்சி மண்டபம் பஸ் நிறுத்தம் பகுதியில் அனுமதியின்றி ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது பஸ் நிறுத்தம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.