உள்ளூர் செய்திகள்

எம்.எல்.ஏ. ஷாநவாஸ் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் மனு அளித்தார். 

நாகையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

Published On 2023-06-01 09:53 GMT   |   Update On 2023-06-01 10:21 GMT
  • பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மனு அளித்தார்.
  • கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான அனைத்து த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

அதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டு பேசியதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதிய பொறுப்பு அமைச்சர், புதிய மாவட்ட ஆட்சியர், புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்ட பிறகு நடக்கும் இந்த முதல் ஆய்வுக் கூட்டத்தில் நாகை சட்டமன்ற தொகுதியின் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை கவனப்படுத்துகிறேன்.

நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம், நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை புதிய கட்டடம், சாமந்தான் பேட்டை மீன்பிடி துறைமுகம், பட்டினச்சேரி கடல் அரிப்பு தடுப்புச் சுவர், நாகையில் பணிபுரியும் மகளிர்க்கு அரசு தங்கும் விடுதி, நாகூர் நெய்தல் பூங்கா, நாகை புதிய கடற்கரையை நீலக்கொடி திட்டத்தின் கீழ் மேம்படுத்துவது, நாகூர் துணை மின் நிலையம், நம்பியார் நகர் புயல் பாதுகாப்பு மையம், நாகை வருவாய் அலுவலகம் பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு ஆகிய திட்டப்பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்.அதுபோல் நாகை தொகுதி சார்ந்த கோரிக்கைகள் நிறைய உள்ளன.

குறிப்பாக, திருமருகல் தனி தாலுகா, நாகையில் அரசு சட்டக் கல்லூரி, காடம்பாடி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துதல், நாகை நகராட்சியை தரம் உயர்த்துதல்,

நாகூர் சில்லடி கடற்க ரையை மேம்படுத்துவது, நாகூர் பேருந்து நிலையம் சீரமைப்பது, நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சூடாமணி விகாரம் கட்டடத்தில் அருங்காட்சியம் அமைப்பது, பாரதி மார்கெட் புதிய கட்டடம், நாகை அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது, ஏனங்குடி விளையாட்டு மைதானம் மேம்படுத்துவது, திட்டச்சேரி பேரூராட்சிக்கு சிறப்பு திட்டங்கள், திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி, நாகையில் பீச் வாலிபால் அகாடமி, அழிஞ்சமங்கலம் ஆதி திராவிடர் நல உயர் நிலைப் பள்ளியை தரம் உயர்த்துதல், நாகூர் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு, நாகூர் சில்லடி மற்றும் நாகை புதிய கடற்கரையில் புறக்காவல் நிலையம், நாகை நகராட்சி பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு, நாகையில் மறைமலை அடிகள் நினைவு கலையரங்கம், நாகை செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரி உட்கட்டமைப்பு மேம்பாடு, நாகூர் திட்டச்சேரி திருமருகல் நூலகங்களுக்கு புதிய கட்டடம் ஆகிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார். கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

Tags:    

Similar News