உள்ளூர் செய்திகள் (District)

பூச்சி மருந்து கடையில் பணம் திருடிய கொள்ளையனையும் கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

பண்ருட்டியில் பூச்சி மருந்து கடையில் பணம் திருடிய கொள்ளையன் கைது

Published On 2023-03-18 07:57 GMT   |   Update On 2023-03-18 07:57 GMT
  • வி.எம். சுந்தர் (30). இவர் பூச்சி மருந்துகடை நடத்தி வருகிறார். வழக்கம் போல இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, மறுநாள் காலைவந்தபோது ,அதிர்ச்சியடைந்தார்
  • உள்ளே டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.

கடலூர்:

பண்ருட்டி எல்.என். புரத்தை சேர்ந்தவர் வி.எம். சுந்தர் (30). இவர் பண்ருட்டி 4முனை சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா காம்ப்ளக்சில் பூச்சி மருந்துகடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி வழக்கம் போல இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி சென்று விட்டு மறுநாள் காலை 8.30 மணி அளவில் மருந்து கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டை உடைத்து கடையில்கொள்ளை போனது தெரிய வந்தது.உள்ளே டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்

. துணை போலிஸ் சூப்பிரண்டு சபியுல்லா நேரில் விரைந்து சென்று கொள்ளை யர்களை பிடிக்க சப்.இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார். பண்ருட்டியில்இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்படை போலீசார் தொடர் நடவடிக்கை மூலம்கொள்ளையன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நேமம் பகுதியை சேர்ந்த ஷாகுல் ஹமீத்(60) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கேரளாவுக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார்அவனை சுற்றி வளைத்து கைது செய்து பண்ருட்டி அழைத்து வந்தனர். விசாரணையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டி கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பூச்சி மருந்து கடையில் கொள்ளையடித்த கொள்ளையனை ஒரு வாரத்தில் துப்பு துலக்கியபண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் ஆனந்த் அன்பு ராஜி ஆகியோரை கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.

Tags:    

Similar News