உள்ளூர் செய்திகள்

கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

டவுன் ரத வீதிகளில் நெகிழி பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

Published On 2023-05-18 09:10 GMT   |   Update On 2023-05-18 09:10 GMT
  • நெல்லை டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் உள்ள உணவு வணிக நிறுவனங்க ளில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
  • தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்பாடு கடைகளில் உள்ளதா என கூட்டாய்வு செய்யப்பட்டது .

நெல்லை, மே. 18-

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்துதலின் பேரிலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசிதீபா வழிகாட்டுதலின் பேரிலும் நெல்லை டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் உள்ள உணவு வணிக நிறுவனங்க ளில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அலுவலர்கள் டைட்டஸ் பெர்னா ண்டோ, சங்கர லிங்கம், ராமசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், செல்லப்பாண்டி ஆகியோர் அடங்கிய குழுவினரால் தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்பாடு கடைகளில் உள்ளதா என கூட்டாய்வு செய்யப்பட்டது .

இந்த ஆய்வின்போது 10 கடைகளில் இருந்து 148 கிலோ நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. சர்பத் மற்றும் குளிர்பானங்களில் பயன்டுத்த, சில்லரை கடைகளுக்கு விநியோகம் செய்ய சுகாதாரமற்ற நிலையில் 3 சக்கர சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ஐஸ்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதுடன் அதனை தயாரித்து வினியோகம் செய்தவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News