காரைக்காலில் சைக்களில் சென்ற வாலிபரிடம் ரூ.20 ஆயிரம் செல்போன் பறிப்பு-மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
- 3 மர்ம நபர்கள், சைக்களில் மோட்டார் சைக்கிளை மோதுவது போல் வந்து நின்றனர்.
- அபிஷேக் மற்றும் கபிலர், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் தனியார் மருத்துவக்கல்லூரி அருகே, சைக்கிளில் சென்ற வாலிபரிடம், ரூ.20 ஆயிரம் மதிப்பி லான செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை, கோட்டுச்சேரி போலீசார் தேடிவருகின்றனர். காரைக்கால் தலத்தெரு கே.எம்.ஜி நகரைச்சேர்ந்தவர் கபிலர். இவர் காரைக்கால் நலவழித்துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் (வயது(22). இவர், சுகாதார ஆய்வாளருக்கு படித்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கிறார். அபிஷேக், வழக்கமாக சைக்களில் உடற்பயிற்சி செய்வது வழக்கமாம். சம்பவத்தன்று காலை, சைக்களில் உடற்பயிற்சி செய்த வாறு, காரைக்கால் கீழகாசாகுடி சாலை வழியாக, தனியார் மருத்துவக்கல்லுரி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்களில் வந்த 3 மர்ம நபர்கள், சைக்களில் மோட்டார் சைக்கிளை மோதுவது போல் வந்து நின்றனர். தொடர்ந்து, சைக்கிளை ஒழுங்காக ஓட்ட மாட்டாயா என கேட்டு அபிஷேக்கை அடிப்பது போல் கையை ஓங்கி, அபிஷேக் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை திடீரென 3 நபர்களில் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, அபிஷேக் மற்றும் கபிலர், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.