உள்ளூர் செய்திகள் (District)

கைது செய்யப்பட்ட தாய், மகன்.

மதுரை நகை வியாபாரிகளிடம் ரூ.3.27 கோடி மோசடி

Published On 2023-08-10 06:47 GMT   |   Update On 2023-08-10 06:47 GMT
  • வாடிக்கையாளர்கள் 11 பேரிடம் புதிய நகைகள் செய்து தருவதாகக் கூறி பணம், கடனாக சேர்த்து ரூ.99 லட்சத்து 47 ஆயிரம் மோசடி செய்தது கண்டறி யப்பட்டது.
  • உடந்தையாக இருந்த முருகபாண்டியின் மனைவி சாந்தி, மகன் வீரவிக்னேசை நேற்று சென்னையில் கைது செய்தனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டி பட்டி கொண்டம நாயக்கன்பட்டி நகைக்கடை உரிமையாளர் முருகபாண்டி (44). இவர் மதுரை தெற்கு ஆவணி மூலவீதி மொத்த நகை வியாபாரி வீரமணி கண்டனிடம் (30) நகைகளை வாங்கி தன் கடையில் விற்றார். வாரந்தோறும் விற்பனையான நகையின் தொகையை வீரமணி கண்டன் வசூலிப்பார். முருகபாண்டி ரூ.16 லட்சத்தி 72 ஆயிரத்து 820 மதிப்புள்ள நகைகளை பெற்று க்கொ ண்டு அதற்கான பணம் தராமல் காலம் தாழ்த்தினார்.

ஆண்டிபட்டி அரசு பள்ளி ஆசிரியரான பிரபு விடம் ரூ.25 பவுன் தங்க நகை புதிதாக செய்து தருவதாக கூறி, ரூ.18 லட்சத்து 74 ஆயிரம் பெற்றுக்கொண்டு நகையை தரவில்லை. இந்நிலையில் கடந்த மே.31-ல் ஆண்டி பட்டி நகைக்கடையை பூட்டிவிட்டு தலைமறை வானார். வீரமணிகண்டன், ஆசிரியர் பிரபு தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தனர்.

கடந்த ஜூன்.1ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முருகபாண்டி மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் தங்கநகை மொத்த வியா பாரிகள் அய்யப்பன், அசோ க்குமார், சுரேஷ்குமார், கார்த்திக், கனகராஜ் ஆகியோரிடம் ரூ.1 கோடியே 52 லட்சத்து 99 ஆயிரத்து 570 மதிப்புள்ள 2 கிலோ 451 கிராம் தங்க நகைகளும், ரூ.47 லட்சத்து 65 ஆயிரத்து 870 மதிப்புள்ள வெள்ளி நகைகளும் அசோக்குமாரி டம் ரூ.27 லட்சம் கடன் பெற்று திருப்பித் தரவில்லை என தெரியவந்தது.

வாடிக்கையாளர்கள் 11 பேரிடம் புதிய நகைகள் செய்து தருவதாகக் கூறி பணம், கடனாக சேர்த்து ரூ.99 லட்சத்து 47 ஆயிரம் மோசடி செய்தது கண்டறி யப்பட்டது. இவ்வாறு பலரிடம் ரூ.3.27 கோடி மோசடி செய்து தலைமறை வானார். முருகபாண்டியை கடந்த ஜூன் 18ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த முருகபாண்டியின் மனைவி சாந்தி, மகன் வீரவிக்னேசை நேற்று சென்னையில் கைது செய்து போலீசார் தேனிக்கு அழைத்து வந்து தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாந்தி மதுரை மத்திய சிறையிலும், வீரவிக்னேஷ் தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்ட னர்.

Tags:    

Similar News