தி.நகர் பாண்டிபஜார் சாலையில் மோட்டார் சைக்கிள் நிறுத்த 1 மணி நேரத்துக்கு ரூ.15 கட்டணம்- கார்களுக்கு ரூ.60 நிர்ணயம்
- காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
- தியாகராயா சாலையில் ஒருமணி நேரத்துக்கு மோட்டார் சைக்கிள் நிறுத்த ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் வாகனங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து நெரிசல் பெருகி வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
மேலும் வணிகப்ப குதிகளில் முக்கியமான சாலைகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே இதை முறைப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் 80 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள தியாகராயா சாலையில் ஒருமணி நேரத்துக்கு மோட்டார் சைக்கிள் நிறுத்த ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தி.நகரில் உள்ள பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5-ம், கார்களுக்கு ரூ.20-ம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது தவிர மற்ற இடங்களில் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.5, கார்களுக்கு ரூ.20 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை சென்னை மாநகராட்சியின் ஜிசிசி ஸ்மார்ட் பார்க்கிங் என்னும் செயலி மூலம் செலுத்தலாம்.