உள்ளூர் செய்திகள்

கே.எஸ்.அழகிரி தன்னிச்சையாக செயல்படுகிறார்: ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

Published On 2022-11-19 02:41 GMT   |   Update On 2022-11-19 02:41 GMT
  • கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் கலந்தாலோசித்தது கிடையாது.
  • கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் கலந்தாலோசித்தது கிடையாது.
  • என்னை ‘பொருளாளர்’ என்கிற பகடைக்காயாக மட்டுமே வைத்துள்ளனர்.

சென்னை :

தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு கையெழுத்துப் பெறப்பட்ட 62 மாவட்டத் தலைவர்களிடம், அந்தக் கடிதத்தை படித்துப் பார்ப்பதற்குகூட நேரம் கொடுக்காமல், அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பது கூட தெரிவிக்காமல், அவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

நெல்லையில் இருந்து வந்திருந்த கட்சியினரை எப்படி ஓடஓட விரட்டி அடித்தார்களோ, அதே பாணியில் தான் 62 மாவட்டத் தலைவர்களிடமும் வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

'மாநில பொருளாளர்' என்கிற பெயரை மட்டும்தான் நான் வைத்திருக்கிறேனே தவிர, நான் பொறுப்புக்கு வந்த நாள் முதல் இதுநாள் வரையில், மாநிலத் தலைவர் என்ன செய்தார் என்று, எனக்கு கடுகளவும் தெரியாது. பொருளாளர் பதவியை மட்டுமே எனக்குத் தந்திருக்கிறார்களே தவிர, கட்சியின் கொடுக்கல்-வாங்கல் பற்றி சிறிதளவும் கூட என்னிடம் சொன்னது கிடையாது. கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் எப்போதுமே கலந்தாலோசித்தது கிடையாது. அதிகாரம் எல்லாமே தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் தான் இருக்கிறது. எல்லாவற்றையும் அவரே தன்னிச்சையாக செய்து வருகிறார்.

இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்து இருக்கிறேன். என்னை 'பொருளாளர்' என்கிற பகடைக்காயாக மட்டுமே வைத்துள்ளனர். அந்தப் பதவியை என்னிடம் இருந்து பறித்தால், எனக்கு எதுவும் ஆகப்போவது இல்லை. அந்தப் பதவி இல்லை என்று நான் கவலைப்பட போவதும் இல்லை.

ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் என்னுடைய தரப்பு நியாயத்தை சொல்வேன். அதன்பிறகு, கட்சித்தலைமை என்ன முடிவு எடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News