உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சின்னமனூர் பகுதியில் மாணவர்களை குறிவைத்து மது, கஞ்சா விற்பனை

Published On 2023-08-03 04:50 GMT   |   Update On 2023-08-03 04:55 GMT
  • சின்னமனூர் பகுதியில் அதிகாலையிலேயே மது, கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
  • மாணவர்களை குறிவைத்து கள்ளத்தனமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக உள்ளது.

சின்னமனூர்:

சின்னமனூர் பகுதியில் அதிகாலையிலேயே மது, கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதிைய சேர்ந்த பாஸ்கரன் கூறுகையில்,

ெபாதுமக்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். ஆனால் பூங்காவில் பல இடங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது.

அங்கு கள்ளத்தனமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக உள்ளது. இதனால் பெரியவர்கள் உள்பட நடைபயிற்சி செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குடிேபாதையில் சுயநினைவின்றி சாலையிலேயே படுத்து உறங்கும் குடிமகன்கள் பொதுமக்களிடம் தகராறிலும் ஈடுபடுகின்றனர். சின்னமனூர் பகுதியில் போன் செய்தால் வீடு தேடி வந்து மது, கஞ்சா சப்ளை செய்து வருகின்றனர்.

பெரியவர்கள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் இயங்கி வருகிறது. இதனால் சிறுவயதிலேயே வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். எனவே போலீசார் மது, கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பூங்காவை சீர் செய்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

Tags:    

Similar News