உள்ளூர் செய்திகள்

கைதான சக்திவேல், சியாமளாதேவி

கொள்ளை வழக்கில் கைதான கள்ளக்காதல் ஜோடி சிறையில் அடைப்பு

Published On 2023-07-24 09:24 GMT   |   Update On 2023-07-24 09:24 GMT
  • எடப்பாடி - ஜலகண்டாபுரம்ரோடு அருகே உள்ள பெருமாள் கோவில் காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மாதையன்.
  • அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த விலை உயர்ந்த எல்.இ.டி டிவி மற்றும் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி - ஜலகண்டாபுரம்ரோடு அருகே உள்ள பெருமாள் கோவில் காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மாதையன். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலை யில், இவரது மனைவி சுந்தராம்பாள், பெருமாள் கோவில் காலனி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இவரது மகன் திருவண்ணா மலை பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் 5-ம் தேதி சுந்தராம்பாள் தனது மகனை பார்க்க திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார்.

நகை கொள்ளை

இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் பெருமாள் கோவில் காலனியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த விலை உயர்ந்த எல்.இ.டி டிவி மற்றும் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இது குறித்து சுந்தராம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எடப் பாடி போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அருகில் உள்ள கண்கா ணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கள்ளக்காதல் ஜோடி

இதில் கொள்ளை சம்ப வம் நடந்த அன்று அந்த வீட்டிற்குள் நுழைந்தது சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமம், பாப்பம்பாடியை அடுத்த சோழவந்தான் வளவு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 24) மற்றும் ஓமலூரை அடுத்த தாசநாயக்கன்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி சியாமளாதேவி (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சக்திவேலுக்கும், சியாமளா தேவிக்கும் தகாதஉறவு இருந்து

வந்ததாகவும், உல்லாச வாழ்க்கையை அனுபவிப்ப தற்காக, இந்த கள்ளக்காதல் ஜோடி சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடுகளுக்குள் நுழைந்து திருட்டுச சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.

ஜெயிலில் அடைப்பு

இதையடுத்து இருவரையும் கைது செய்த எடப்பாடி போலீசார் அவர்களிடமிருந்து. கொள்ளையடிக்கப்பட்ட எல்.இ.டி டிவி மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மீட்டனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News