சேலத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
- வக்கீல் மணிகண்டன் (வயது 30) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
- அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் வக்கீல் மணிகண்டன் (வயது 30) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டனம்
இதையொட்டி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், வக்கீல் கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் மேலும் அந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதுபோல சம்பவங்கள் மேலும் நடக்காமல் வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.
பணிகள் பாதிப்பு
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.