பொது விநியோக திட்டப் பொருட்களை கடத்தபயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
- பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப்பட்ட போது, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் பதியபட்ட வழக்குகளில் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- இவ்வாறு கைப்பற்றப் பட்ட 93 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப்பட்ட போது, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் பதியபட்ட வழக்குகளில் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப் பட்ட 93 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் வாகன உரிமை யாளர்கள் வாகன அபராதத் தொகையினை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள முன்வரவில்லை.
இதனால் இந்த 93 வாகனங்கள் வருகின்ற 25-ந் தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் சேலம் மேற்கு வட்டம், சர்கார் கொல்லப்பட்டி மருத்துவ கல்லூரி எதிரில் அமைந்துள்ள சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவல கத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
வாகனங்களை பார்வையிட சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.