உள்ளூர் செய்திகள்

காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கல்வராயன் மலை கிராமங்களில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

Published On 2023-06-22 09:39 GMT   |   Update On 2023-06-22 09:39 GMT
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, மேல்நாடு, கீழ்நாடு ஊராட்சி சூலாங்குறிச்சி, கலக்காம்பாடி, தாழ்வள்ளம் கிராமங்களில், காசநோயாளிகளை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
  • முகாமை காசநோய் பிரிவு சேலம் மாவட்ட துணை இயக்குனர் கணபதி தொடங்கி வைத்தார்.

வாழப்பாடி

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை சூலாங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, மேல்நாடு, கீழ்நாடு ஊராட்சி சூலாங்குறிச்சி, கலக்காம்பாடி, தாழ்வள்ளம் கிராமங்களில், காசநோயாளிகளை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமை காசநோய் பிரிவு சேலம் மாவட்ட துணை இயக்குனர் கணபதி தொடங்கி வைத்தார்.

காசநோய் பிரிவு மருத்துவ குழுவினர், காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்து மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முகாமில், மருத்து அலுவலர்கள் ராஜா, காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் சின்னதுரை, சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், நடமாடும் எக்ஸ்-ரே பரிசோதனை எந்திரத்தில் 298 நபர்களுக்கு எக்ஸ்-ரே எடுத்தும் 50 நபர்களுக்கு சளி மாதிரிகள் எடுத்தும் பரிசோதனை செய்தனர்.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கே எக்ஸ்-ரே எந்திரத்தை கொண்டு வந்து, பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தது மிகவும் உபயோகமாக அமைந்ததாக பயனாளிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News