உள்ளூர் செய்திகள்

மரக்காணம் பகுதியில் பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

Published On 2022-09-26 07:16 GMT   |   Update On 2022-09-26 07:16 GMT
  • மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அழகன் குப்பம் முதல் பெரியமுதலியார் சாவடி வரை இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.
  • தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடலூர்:

தமிழர் முழுவதும் 4 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அழகன் குப்பம் முதல் பெரியமுதலியார் சாவடி வரை இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. மேலும் ஆலத்தூர், கீழ்குத்துபட்டு, கந்தாடு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் மரக்காணத்தில் உள்ள உப்பளப் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வேலை இன்று நடைபெறவில்லை.

இதனால் இந்த உப்பு உற்பத்தியில் வேலை பார்க்கும் கூலி தொழிலா ளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மரக்காணம் மீனவ பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை ஒரு சில மீனவர்கள் மட்டும் சென்றனர். இதனை அடுத்து அந்த பகுதியில் கடலோர காவல் படையினர் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News