செங்கோட்டைகோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
- தேங்காய் மாலையால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
- பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
செங்கோட்டை:
சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆரா தனையும் நடைபெற்றது.
மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தேங்காய் மாலையால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார்.
மேலும் இதே போன்று வல்லம், இலஞ்சி, பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு, உள்ளிட்ட சிவபிள்ளையார் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர் ஸ்ரீமுக்தி விநாயகர் வீரகேரள விநாயகர் அனைத்து கிராமங்களிலுள்ள விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
பால விநாயகர், விநாயகர் கோவில்களில் ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.