உள்ளூர் செய்திகள்

அறிவியல் கண்காட்சி நடந்தது.

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published On 2023-03-01 09:55 GMT   |   Update On 2023-03-01 09:55 GMT
  • 300-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
  • அறிவியல் கண்காட்சியில் சுமார் 1500 மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்தில் உள்ள மதுக்கூர் -வடக்கில் மதுக்கூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் மன்றம் மற்றும் வானவில் மன்றத்தின் சார்பாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை ஏற்று துவங்கி வைத்தார்.

உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம் ஆலோசனைகளை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், பொருளாளர் ரெங்கராசு, ஆசிரியர் சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேரிடர் மேலாண்மை, நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, அறிவியல் தத்துவங்கள் மற்றும் இயற்கை உணவு ஆகிய தலைப்புகளில் 300-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாரகேஸ்வரி உள்ளிட்ட அறிவியல் ஆசிரியர்கள் செய்திருந்தனர். சுமார் 1500 மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

முடிவில் ஆசிரியர் இருளப்பசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News