பண்ருட்டியில் வாகன சோதனை காரில் கடத்தி வந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேரிடம் தீவிர விசாரணை
- போக்குவரத்து விதிகளை மீறி பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனைசெய்தனர்.
- இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டியில் போலீசார் வாகன சோதனையின் போது ேபாதை பொருட்கள் மூட்டை, மூட்டையாக சிக்கியது. பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போக்குவரத்து போலீசார் பண்ருட்டி ராஜாஜி சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும்பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வழி பாதையில் போக்குவரத்து விதிகளை மீறி பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனைசெய்தனர்.
காரில் அரசினால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டை ,மூட்டையாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த திருச்செந்தூரை சேர்ந்த விக்னேஷ் காரில் பயணம் செய்த மணிக்குமார் ஆகிய இருவரையும் பண்ருட்டி போலீசில்ஒப்படைத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.