கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி: அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் சக் ஷம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக் கான சுயம்வரம் நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலி யூரில் நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மணமகன் மற்றும் மணமகள்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
கடலூர்:
சிகரம் உன்னால் முடியும் தோழா மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் சக் ஷம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக் கான சுயம்வரம் நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலி யூரில் நடைபெற்றது. இதற்கு சையத் முஸ்தபா தலைமை தாங்கினார். வள்ளிவிலாஸ் உரிமையா ளர் பாலு, பொருளாளர் குமரவேல், துணைத்தலை வர் சுந்தர மூர்த்தி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்ராயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மணமகன் மற்றும் மணமகள்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மணமகன் மற்றும் மணமகள்கள் தங்களுக்கு தகுதியான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர்.
முன்னதாக தாமரைச் செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் , கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் முத்துக் குமாரசாமி முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், ராஜன், அருண், குளோபல் மனவளர்ச்சி சிறப்பு பள்ளி இயக்குனர் கோபால், கிறிஸ் டாோபர், இக்னைட் முதி யோர் காப்பக இயக்குனர் ஜோஸ் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.