உள்ளூர் செய்திகள் (District)

தேவகோட்டை நகர மன்ற தலைவர் மினி வேன்களுக்கான சாவியை அதன் ஓட்டுனர்களிடம் வழங்கினார். 

ரூ.80 லட்சம் மதிப்பில் கழிவுகளை அகற்ற நவீன வாகனம்

Published On 2023-11-07 07:31 GMT   |   Update On 2023-11-07 07:31 GMT
  • ரூ.80 லட்சம் மதிப்பில் கழிவுகளை அகற்ற நவீன வாகனத்தை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
  • ஓட்டுனரிடம் அதற்கான சாவியை வழங்கினார்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி மிகப் பழமையானது. மொத்தம் 27 வார்டுகளை உள்ளடக்கியது. துப்புரவு பணியாளர்கள் திடக்கழிவுகளை அப்புறப்படுத்த போதிய வாகனங்கள் இல்லாததால் பெரிதும் அவதிபட்டனர்.

இதனை கருத்தில் கொண்டு நகர் மன்ற தலைவர் தீவிர முயற்சியால் அன்றாடம் திடக்கழிவுகளை எளிதாக துப்புரவு பணி யாளர்கள் கொண்டு செல்ல 15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.80.30 லட்சம் மதிப்பிலான ஹைட்ராலிக் 11 மினி வேன்களை நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் துணைத்தலைவர் ரமேஷ் ஆணை யாளர் பார்கவி பொறியாளர் சையது அலி தூய்மை பணியாளர்களிடம் பயன்பாட்டிற்க்கு வழங்கி னார்கள்.

நகர்மன்ற தலைவர் கொடி அசைத்து மினி வேன்களை தொடங்கி வைத்தார். மேலும் ஓட்டுனரிடம் அதற்கான சாவியை வழங்கினார்.

ஹைட்ராலிக் மினி வேன்கள் நவீன முறையில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு வார்டுகளுக்கு குப்பைகளை சேகரிக்க செல்லும் பொழுது துப்புரவு பணியாளர்களின் பணி எளிதாகவும் விரை வாகவும் செய்ய ஏதுவாகிறது.

Tags:    

Similar News