- சிங்கம்புணரியில் வேளாண்மை விற்பனை இயக்குநர் ஆய்வு செய்தார்.
- நெல் மற்றும் வேளாண் விளை பொருட்களை பார்வையிட்டார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையை மாநில வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கடலை, நெல் மற்றும் வேளாண் விளை பொருட்களை பார்வையிட்டார். நேரடி கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டத்தின் பயனாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படும் விதம், மக்களின் ஆதரவு உள்ளிட்ட விஷயங்களை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
சிவகங்கை மாவட்டத்தின் முதல் தென்னை உற்பத்தியாளர் கம்பெனியின் எண்ணெய் உற்பத்தி வெளிநாடுகளுக்கு ஏற்படும் ஏற்றுமதி செய்வது சம்பந்தமாக செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர் (மேலாண் வணிகம்) சுரேஷ், வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் சாந்தி, வேளாண்மை அலுவலர் காளிமுத்து, கனிமொழி, புவனேசுவரி, விற்பனை கூட கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாயாண்டி, வேளாண் உதவி அலுவலர்கள் ராதா, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில், தி.மு.க. நகர தலைவர் கதிர்வேல் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குநர் ரத்னகாந்தி செய்திருந்தார்.