உள்ளூர் செய்திகள்

ஆடி கார்த்திகை ஊஞ்சல் உற்சவ விழா

Published On 2022-07-25 07:14 GMT   |   Update On 2022-07-25 07:14 GMT
  • ஆடி கார்த்திகை ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது.
  • பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவராயன்பட்டியில் தண்டாயுதபாணி கோவிலில் 2-ம் ஆண்டு ஆடி கார்த்திகை ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. முன்னதாக 2 நாட்கள் நான்கு கால பூஜையுடன் தொடங்கப்பட்டு, அதனை தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

மலர் அலங்காரத்தில் வண்ண வண்ண விளக்கு ஒளியில் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியருக்கு அரோகரா கோஷம் முழங்க ஊஞ்சல் உற்சவ வைபோக விழா நடந்தது. விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து ஊஞ்சல் உற்சவ விழாவை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீனிவாசன், சிவகாமி ஆச்சி குடும்பத்தினர் செய்திருந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் ஊஞ்சல் உற்சவம் தேவகோட்டை, கண்டவராயன்பட்டி ஆகிய இரு ஊர்களில் மட்டும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News