உள்ளூர் செய்திகள்

சிறந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி விருதுகள்- பொற்கிழி வழங்கினார்.


சிறந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது- பொற்கிழி

Published On 2022-08-13 08:32 GMT   |   Update On 2022-08-13 08:32 GMT
  • சிறந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது-பொற்கிழி சிவகங்ககை லெக்டர் வழங்கினார்.
  • 5 வகை பிரிவுகளின் கீழ் சிறந்த கலைஞர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் 5 வகை

பிரிவுகளின் கீழ் சிறந்த கலைஞர்களாக தேர்வு செய்யப்பட்ட 15 கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பங்கேற்று பொன்னாடை அணிவித்து, சிறந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் சிலம்பம் போட்டியில் பங்கேற்ற முனீஸ், சுவினாஸ்ரீ மற்றும் விசை இசை போட்டியில் கலந்து கொண்ட லட்சுமிமித்ரன் ஆகியோருக்கு கலைஇளமணி விருதும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.

சிலம்பம் போட்டியில் கலந்து கொண்ட பெருமாள், ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாரிக்கண்ணு, மரக்கால் ஆட்டத்தில் கலந்து கொண்ட தேவேந்திரன் ஆகியோருக்கு கலைவளர்மணி விருதும் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும், வழங்கப்பட்டுள்ளன.

கிராமிய பாடகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சண்முகராசு, சிற்ப கலையில் கலந்து கொண்ட செல்வராஜ், தப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாக்கியராஜ் ஆகியோருக்கு கலைச்சுடர்மணி விருதும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.

வீதி நாடகம் போட்டியில் பங்கேற்ற தங்கவேல், கொம்பு இசையில் கலந்து கொண்ட வேலு, தவில் இசையில் கலந்து கொண்ட சந்திரசேகரன் ஆகியோருக்கு கலைநன்மணி விருதும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.

பம்பை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாண்டி, நாதஸ்வரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போஸ், நாடகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜலட்சுமி ஆகியோருக்கு கலைமுதுமணி விருதும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் விருது மற்றும் பொற்கிழி பெற்றவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து இந்த கலைகளை எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக் கொடுத்து புதிய கலைஞர்களை உருவாக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலைபண்பா ட்டுத்துறை மைய உதவி இயக்குநர் செந்தில்குமார், தேர்வுக்குழு உறுப்பினர் நாகராஜபூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News