- பா.ஜ.க. உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- நகர துணை தலைவர் ஜோதிசண்முகம் நன்றி கூறினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து காரைக்குடி 5 விளக்கு அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார்.முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில், வருகிற ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்மு 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார்.
தி.மு.க. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் ரூ.1000, பழைய ஓய்வூதிய திட்டம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட எதையும் நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ஆட்சியை ராஜினாமா செய்துவிடுங்கள் என்றார்.
மாநில இளைஞரணி துணை தலைவர் வேலங்குடி பாண்டித்துரை, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் துரைப்பாண்டி, மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர் உள்ளிட்ட பலரும் பேசினர்.
தேசிய செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், நகர தலைவர் பாண்டியன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவி கோமதி நாச்சியார், மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், நகர செயலாளர் சுரேஷ்நாத், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நிர்வாகி பூப்பாண்டி, மாவட்ட துணை தலைவர் இலுப்பகுடி நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.நகர துணை தலைவர் ஜோதிசண்முகம் நன்றி கூறினார்.