உள்ளூர் செய்திகள் (District)

விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்திய காட்சி.

விவசாயிகள் முற்றுகை போராட்டம்

Published On 2023-10-20 06:21 GMT   |   Update On 2023-10-20 06:21 GMT
  • பயிர் காப்பீடு வழங்க கோரிக்கை விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • அதன்பின் போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மனு வட்டாட்சி யரிடம் வழங்கப்பட்டது.

மானாமதுரை

இளையான்குடி வட்டத்தில் 54 வருவாய் பிரிவுகள் உள்ளன. இவற்றில் கடந்த ஆண்டுக்கான பயிர்காப்பீடு தொகை 12 வருவாய் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க உத்தர விடப்பட்டு உள்ளது.

இதையடுத்து அனைத்து வருவாய் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் பயிர்காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இளையான்குடி ஒன்றி யத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இளையான்குடி வட்டா ட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் அலுவலக வளாகத்துக்குள் சென்று போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் பயிர்காப்பீடு வழங்க கோரி அலுவலக வாயிலில் நின்று முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி, துணைத் தலைவர் அழகர்சாமி, ராமநாதபுரம் வைகை பாசன சங்கத் தலைவர் மதுரைவீரன், தாலுகா சங்கச் செயலாளர் செந்தில் குமார், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜான் சேவியர் பிரிட்டோ, விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கருமலை கதிரேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பின் போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மனு வட்டாட்சி யரிடம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News