உள்ளூர் செய்திகள்

கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-12 07:13 GMT   |   Update On 2023-06-12 07:13 GMT
  • கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.

நெற்குப்பை

திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேக்காட்டுக்கருப்பர், பொன்னடைக்கன் சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மேக்காட்டு கருப்பர், பொன்னடைக்கன் சாமி, பெரிய கருப்பர், சின்ன கருப்பர், வீரன்னசாமி, ஆண்டிசாமி, அம்மன் சாமி, முத்துக்கருப்பர் சாமி என அனைத்து தெய்வங்களுக்கும் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டது.

பின்பு ராஜேந்திர வேளாளர் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை வேடுவர் கண்ணப்ப குல அம்பலகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News