உள்ளூர் செய்திகள் (District)

அய்யனார் கோவில் சேமக்குதிரைக்கு கும்பாபிஷேகம்

Published On 2023-04-09 08:56 GMT   |   Update On 2023-04-09 08:56 GMT
  • அய்யனார் கோவில் சேமக்குதிரைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
  • அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் சாலையில் அலங்காரக்குளம் பகுதியில் ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வைகைக்கரை அய்யனார், சோணையா சுவாமி கோவில் உள்ளது. இதன் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேமக் குதிரை சிலை, அய்யனார், மடப்புரம் காளி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

கோவில் வளாகத்தில் புனித நீர் கடங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. 2-ம் கால பூஜை முடிந்து பூர்ணாகுதி நடைபெற்றதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. சேமக் குதிரைக்கும், அதன் மீது எழுந்தருளியுள்ள அய்யனார் சுவாமிக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை காண கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கோவிலில் உள்ள சோனையா சுவாமி, மாயாண்டி சுவாமி மற்றும் அய்யனார் சுவாமிக்கும் மகாஅபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கார் வேன்களில் சென்ற ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அய்யனார், சோனையா சுவாமிகளையும், சேமக் குதிரையையும் தரிசனம் செய்தனர். மதியம் கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை மானாமதுரை ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச்சங்கத்தின் தலைவரும், கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலருமான காளீஸ்வரன் செய்திருந்தார்.

Tags:    

Similar News