- தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் மின்விளக்கு அலங்கார தேரோட்டம் நடந்தது.
- திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவின் 8 -ம் நாளில் மின்விளக்கு அலங்காரத் தேரோட்டம் நடந்தது.
இந்த கோவிலில் நடை பெற்று வரும் பங்குனி திருவிழாவில் பொங்கல் வைபவத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் கோவிலில் திரண்டு விடிய, விடிய தீச்சட்டி எடுத்தும், குழந்தை களுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும், ஆடு கோழிகளை பலியிட்டு பொங்கலிட்டும், மாவிளக்கு பூஜை நடத்தியும் நேர்்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
நேற்று முன்தினம் இரவு நடந்த தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் முத்து மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பாடாகி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேருக்கு எழுந்தருளினார்.
சம்பிரதாய பூஜைகள் முடிந்து இரவு 8 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவிலைச் சுற்றி வந்து தேர் நிலை சேர்ந்தது. தேரோட்ட விழாவில் கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பங்குனித் திருவிழாவின் 9-வது நாளான ேநற்று காலை பால்குடம், மாலை யில் ஊஞ்சல் உற்சவம், இரவு பூப்பல்லக்கில் முத்து மாரியம்மன் பவனி வருதல் நடந்தது.