உள்ளூர் செய்திகள்
- தேசிய வருவாய் வழி திறன் பயிற்சி நடந்தது.
- சமூகஅறிவியல் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் பயிற்சி நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லெமாயு தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் லட்சுமிதேவி, மேற்பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நாகேந்திரன் வரவேற்றார். முதன்மை கருத்தாளராக ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் மோகன் கலந்து கொண்டு திறன் பயிற்சி அளித்தார். ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ராஜ்குமார், செல்வம் செயல்பட்டனர். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், முன்னாள் மாணவர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊரக திரனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், சஜன், ஹரிஹரன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். சமூகஅறிவியல் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.