வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
- வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
- நகர்மன்ற தலைவர் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வ செய்தனர்.
சிவகங்கை நகராட்சியில் கட்டப்பட்டுவரும் அறிவுசார் மையம், செட்டியூரணியில் கரைகளை பலப்படுத்தும் பணி, வாரசந்தை, தெப்பக்குளம், ராணி ரெங்க நாச்சியார் பஸ் நிலையம் ஆகியவற்றில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த அவர்கள் இதுதொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா கூறியதா வது:-
சிவகங்கை நகராட்சி யில் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்க ளுக்கு பயிற்சி வழங்க ரூ.1.85 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வரு கிறது. ெசட்டியூரணியை அதிக ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணியும், அதனை சுற்றி வேலி அமைக்கும் பணியும், நடை பாதை ஏற்படுத்தவும் பணிகள் நடந்து வருகிறது.
சிறுவர்களுக்கான விளை யாட்டு உபகரணங்களுக்காக ரூ.1.60 கோடி ஒதுக்கீடு ெசய்யப்பட்டுள்ளது. சாலையோர கடைகளை ஒழுங்குப்படுத்தவும், வாரசந்தையில் கூடுதல் கடைகள் அமைக்கவும் ரூ.3 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. ராணி ரெங்கநாச்சியார் பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.