உள்ளூர் செய்திகள்

மஞ்சுவிரட்டு போட்டி நடத்தக்கோரி கலெக்டரிடம் மனு

Published On 2022-08-04 08:37 GMT   |   Update On 2022-08-04 08:37 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.
  • வடமாடு நல சங்கம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்தனர்.

சிவகங்கை

வாடிவாசல் மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கோவில் திருவிழா மற்றும் விவசாய பணிகள் காரணமாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்தன. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிகள் மே மாதத்திற்கு பிறகு நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்தார். மீறி மஞ்சு விரட்டு நடைபெற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு வடமாடு நல சங்கம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த கால நீட்டிப்பு வழங்க கோரி மனு கொடுத்தனர்.

பின்னர் கவுரவ தலைவர் பனங்குடி சேவியர் கூறுகையில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றால் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

மாநில தலைவர் அந்தோணி, துணைத்தலைவர் பரத்ராஜ் மற்றும் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News