- திருப்பத்தூரில் சமூக வளர்ச்சி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
- அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதற்குடியோன் சமூக வளர்ச்சி சங்கம் சார்பில் 3-ம் ஆண்டு முப்பெரும் விழாவாக அம்பேத்கர் பிறந்த நாள் விழா, 10, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா, மேல்நிலை கல்வி முடித்தோருக்கு உயர்கல்வி வழிகாட்டல் விழா நடந்தது. தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் கலைமகள் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் விராமதி ஆராயி கருப்பையா, மாதவராயன்பட்டி பானுமதி சேது முன்னிலை வகித்தனர். நிர்வாகி சுப்பிரமணியன் வரவேற்றார்.
சென்னை சுங்கத்துறை இணை கமிஷனர் பாண்டியராஜா சிறப்புரையாற்றினார், ஆசிரியர் பால்ராஜ், சமூகவியலாளர் ஜெய்சங்கர், ஆசிரியர்கள் மனோகரன், நடராஜன், கணோசன், அழகுமணி, ரமேஷ், மற்றும் பாலமுருகன் ஆகியோர் பேசினர். விழாக்குழுவினர் சந்திரசேகர், விஸ்வநாதன், அண்ணாதுரை, பாண்டியன், ரவி, சரவணன், ஆசைத்தம்பி, காமராஜ், பழனிக்குமார், செந்தில்குமார், சுப்பிரமணியன், மாணிக்கவேலு உள்பட பலர் பங்கேற்றனர். கல்லல் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.