திருப்பத்தூர் ஒன்றிய கிராம சபை கூட்டங்கள்
- சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- தென்னை மரம் நடுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருப்பத்தூர்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புகழ்பெற்ற பாடலை தந்த கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான "பூங்குன்ற நாடு" என்று அழைக்கப்படும் சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
முன்னதாக ஊராட்சி வரவு செலவு கணக்குகள் கிராம மக்கள் முன்னி லையில் சமர்ப்பிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கணியன் பூங்குன்றனாருக்கு திருப்பத் தூர் பொன்னமராவதி செல்லும் சாலையில் மகிபாலன்பட்டி விலக்கு ரோட்டின் முன்பு அவருக்கென்று நினைவு வளைவு ஒன்றை எழுப்புதல், பிறந்த ஊரான இம்மண்ணில் மணிமண்ட பம் ஒன்று அமைத்தல், மேலும் மகிபாலன் பட்டிய லில் இருந்து வேலங்குடி கிராமத்திற்கு செல்லும் வனப்பகுதி பாதையை தார் சாலையாக மாற்றுதல், சமுதாய கூடம் கட்டுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
கொன்னத்தான்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மன்ற தலைவர் அழகு பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கொன்னத்தான் பட்டி மற்றும் துவார் ஆகிய இரு ஊராட்சிகளை இணைக்கும் அயிரக்குடி பெரிய கண்மாயிக்கு பருவ மழை காலங்களில் தண்ணீர் வரும் விருசுளி ஆற்றின் வரத்து கால்வாயின் குறுக்கே ஆயகட்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய தடுப்பணை கட்டுதல்,சமுதாய கூடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல்,அனைத்துசமுதாயத்தினருக்கான பொது மயான கரையில் தண்ணீர் தொட்டி கட்டுதல், 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொன்னைத்தான் குடிநீர்ஊரணி சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து அதன் உள்ளே தென்னை மரம் நடுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டங்களில் ஊராட்சி மன்ற செயலர்கள், வார்டு உறுப்பினர்கள், அங்கன் வாடி பணியா ளர்கள், மகளிர் சுயநிதி குழுக்கள், கிராம பொது மக்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவ லர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.