உள்ளூர் செய்திகள் (District)

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி முடித்த 349 ராணுவ வீரர்கள் அணிவகுத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்தோ-திபெத் பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு

Published On 2023-11-02 08:05 GMT   |   Update On 2023-11-02 08:05 GMT
  • சிவகங்கை அருகே இந்தோ-திபெத் பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடந்தது.
  • சிறப்பாக செயல்பட்ட 7 வீரர்களுக்கு அவர்கள் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.

சிவகங்கை

சிவகங்கை அருகே இலுப்பகுடியில் இந்தோ- தீபத் பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி மையம் உள்ளது. இங்கு 44 வாரங்கள் ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல், மலை ஏறுதல், நீச்சல் பயிற்சி, யோகா, தற்காப்பு பயிற்சி, பல்வேறு உடன் திறன் பயிற்சி உள்ளிட்ட கடுமை யான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இங்கு பயிற்சி பெற்ற வீரர்கள் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். படை எண். 481 முதல் 485 பிரிவை சேர்ந்த 349 வீரர்கள் தங்களின் பயிற்சியினை நிறைவு செய்தனர்.

இதையடுத்து பயற்சி நிறைவு விழா ஐ.ஜி. அசோக் குமார், டி.ஐ.ஜி. அக்சல் சர்மா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வீரர்க ளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பல்வேறு பிரிவு களில் சிறப்பாக செயல் பட்ட 7 வீரர்களுக்கு அவர்கள் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.

வீரர்கள் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு வீர சாகசங்களை நிகழ்த்தி காட்டி பார்வையாளர்களை ரசிக்க வைத்தனர்.

இறுதியாக பயிற்சி நிறைவு செய்த வீரர்கள் தங்கள் உறவினர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.

Tags:    

Similar News