திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் திறன் வளர் பயிலரங்கம்
- திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நேர்காணல் திறன்’ என்ற தலைப்பில் திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது.
- விவேகம் நிறுவனங்கள் குழுமத்தின் இயக்குனர் முத்துக்குமார் நேர்முக தேர்வின் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்றத்தின் சார்பாக 'நேர்காணல் திறன்' என்ற தலைப்பில் திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது. இளங்கலை பொருளியல் மன்ற துணை தலைவர் பேராசிரியர் சிவ இளங்கோ வரவேற்றார். பேராசிரியர் கணேசன், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். விவேகம் நிறுவனங்கள் குழுமத்தின் இயக்குனர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நேர்முக தேர்வின் முக்கியத்துவம் பற்றியும், நேர்முக தேர்வில் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் நேர்முக தேர்வில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்கி கூறினார். முடிவில் மாணவ செயலர் சாமுவேல் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சிவமுருகன், அசோகன், அன்றோ சோனியா, உமா ஜெயந்தி, அமராவதி, பிரியதர்ஷினி மற்றும் 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனைப்படி பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள் மற்றும் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.