உள்ளூர் செய்திகள்
சூரிய ஒளி பொறி செய்முறை விளக்க கூட்டம்
- கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் பி.ஜி. பி வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு சூரிய ஒளி பொறி செய்முறை விளக்க கூட்டம் நடைபெற்றது.
- அப்போது பயிர் சாகுபடி ெசய்வது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் குப்பிரிக்காபாளையம் ஊராட்சியில் தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் பி.ஜி. பி வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு சூரிய ஒளி பொறி செய்முறை விளக்க கூட்டம் நடைபெற்றது.
அப்போது பயிர் சாகுபடி ெசய்வது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கினர். அதில் ஏற்படும் இழப்பீடுகள், வருமானம் குறித்தும் தெரிவித்தனர். இதில், உதவி வேளாண் அலுவலர் சந்திரசேகரன், கிராம நிர்வாக அலுவலர் கஜலட்சுமி மற்றும் ஊராட்சி தலைவர் அரசு என்கிற பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் வேளாண் மாணவர்களுக்கு சூரிய ஒளி விளக்கு பொறியின் பயன்களை கூறி செய்முறை விளக்கம் அளித்தனர்.