உள்ளூர் செய்திகள்

முத்தம்மாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

முத்தம்மாள் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2023-07-28 09:31 GMT   |   Update On 2023-07-28 09:31 GMT
  • காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சென்ற மாதம் ஜூன் 6 தேதி நடைபெற்ற நிலையில் 49 நாட்கள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று.

இன்று 48வது நாள் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

இதில் அதிராம்பட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள மகிழங்கோட்டை, ஏரிப்புறக்கரை, இராஜமடம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News