தஞ்சை ராஜகோபாலசாமி கோவிலில் பகுளாமுகி காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு
- அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜ கோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இங்கு புகழ்பெற்ற பகுளாமுகி காளியம்மன் மற்றும் தஞ்சாவூரில் மிகவும் பிரசித்தி பெற்ற உயரமான விஷ்ணு துர்க்கை அம்மன், சிவ துர்க்கை அம்மன் சன்னதி அமைந்துள்ளது.
ஆண்டு தோறும் ஆடி மற்றும் தை, அனைத்து வெள்ளி கிழமைகளில் சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.
இன்று ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு பகுளாமுகி காளியம்மன், விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இவ்வழி ப்பா ட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணை யர் கவிதா, கோவில் செ யல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.