உள்ளூர் செய்திகள் (District)

அவசரக்கால உதவி எண்கள் பற்றி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்களுக்கு அவசரகால உதவி எண்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

Published On 2023-04-01 09:57 GMT   |   Update On 2023-04-01 09:57 GMT
  • மாணவ-மாணவிகள் அவசர கால உதவி எண்கள் அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
  • அதிராம்பட்டினம், மனோரா பஸ் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தஞ்சாவூர்:

உலக சமூகப்பணி தின விழாவையொட்டி பொதுமக்களுக்கான அவசரகால உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு பயணம் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கியது.

இதில் தஞ்சை வல்லம் அடைக்கல மாதா கல்லூரி சமூகப்பணி துறை சார்பில் மாணவ-மாணவிகள் அவசர கால உதவி எண்கள் அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை கல்லூரி தாளாளர் அருணாச்சலம் தலைமையில் கல்லூரி முதல்வர் சுமதி, முதன்மையர் முனைவர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

அவசரகால உதவி எண்கள் பயன்பாடு குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் கல்லூரி சமூகப்பணித்துறைத் தலைவர் முத்துக்குமார், சமூக பணித்துறை பேராசிரியர்கள்வனிதா, கோபி ஆகியோர் வழிகாட்டுதலின் படி பொதுமக்களுக்கான அவசர கால உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு பயணம் நடைப்பெற்றது.

ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரி, பஸ் நிலையம், பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளி தம்பிக்கோட்டை வழியாக முத்துப்பேட்டை அண்ணா பஸ் நிலையம், அதிராம்பட்டினம் பஸ் நிலையம், மனோரா பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News