அரசியல் பிரமுகர் ஜீப்பில் திடீர் 'தீ'
- ஜீப் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
- திடீரென ஏற்பட்ட தீயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்:
கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர், தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக உள்ளார்.
இந்த நிலையில் ஓரு வழக்கில் ஆஜராவதற்காக அலெக்ஸ் தனது ஜீப்பில் நேற்று காலை கும்பகோ–ணம் கோர்ட்டுக்கு ஆதரவா–ளர்களுடன் வந்திருந்தார்.
ஜீப்பை கோர்ட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி அவசர பிரிவு நோயாளிகள் பிரிவு கட்டிடத்துக்கு இடையே நிறுத்தி இருந்தார். மதியம் 1.30 மணியளவில் அவரது ஜீப் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
ஆனால் முடியவில்லை. ஜீப்பில் எரிபொருள் அதிகமாக இருந்ததால் தீ மள, மளவென பெருகி ஜீப் கொழுந்து விட்டு எரிந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
தகவல் அறிந்த கும்ப–கோணம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அரசு ஆஸ்பத்திரி, அர–சுக்கு சொந்தமான அலுவலகங்கள், கோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் உள்ள பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பி–ரண்டு அசோகன் மற்றும் போலீ–சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜீப்பில் எப்படி தீப்பிடித்தது? மர்ம நபர்கள் ஜீப்புக்கு தீ வைத்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜீப் தீப்பற்றி எரிந்த பகுதியை தடவியல் நிபு–ணர்கள் உடனடியாக வந்து ஆய்வு செய்தனர்.
இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசா–ரணை நடத்தி வருகி–றார்கள். அலெக்சின் மனைவி ரூபின்சா, கும்ப–கோணம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பி–டத்தக்கது.