கோவில்பட்டியில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி
- கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- தொடர்ந்து மாவட்ட மன நல மருத்துவர் ஜோனா தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று மாவட்ட மன நல திட்டம் சார்பாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனை இணை இயக்குனர் (பொறுப்பு) நலப்பணிகள் அகத்தியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிலைய மருத்துவ அலுவலர் சுதா, மாவட்ட மன நல மருத்துவர் ஜோனா, ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன நல உளவியலாளர் சேது வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவிகள் அனைவரும் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்த நடைபெற்ற பேரணியில் மாணவிகள் கையில் பதாதைகள் ஏந்தியும், விழிப்புணர்பு கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். பேரணியானது புது ரோடு வழியாக ரெயில் நிலையம் சென்று கோவில் பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.
தொடர்ந்து மாவட்ட மன நல மருத்துவர் ஜோனா தலைமையில் கருத்தரங்கம் நடை பெற்றது. மாணவிகளுக்கு தற்கொலை தடுப்பு சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்,
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி பேராசிரியர்கள் கற்குவேல் ராஜா, ஜெயா, ஸ்ரீ ராம ஜெயா, மருத்துவமனை கணினி தரவு உதவியாளர் செல்வ குமாரி, ஆக்டிவ் மைண்ட்ஸ் மேற்பர்வையாளர்கள் மாடசாமி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மன நல திட்ட சமூக பணியாளர் பெரியசாமி நன்றி கூறினார்.