உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்களை அசோக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

Published On 2022-07-09 10:15 GMT   |   Update On 2022-07-09 10:15 GMT
  • குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.2466 மதிப்பிலான ரசாயன உரங்கள் வழங்கினார்.
  • ஒரு ஏக்கருக்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், தனி பிரிவினருக்கு 70 சதவீத மானியத்தில் இடுபொருட்களும் வழங்கி பேசினார்.

பேராவூரணி:

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டம்-2022 மானியத்தில் இடுபொருட்கள் வழங்கும் விழா சேதுபாவாசத்திரம் வட்டாரம் குருவிக்கரம்பையில் நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர் தலைமை வகித்தார். அசோக் குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சாந்தி வரவேற்றார்.

சேதுபாபாசத்திரம் வட்டாரத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.2466 மதிப்பிலான ரசாயன உரங்களும், மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தில் சிறுதானிய பயிர்களான கேழ்வரகு, நிலக்கடலை, உளுந்து சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், தனி பிரிவினருக்கு 70 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் வழங்கி பேசினார். விடுபட்ட தகுதி உள்ள விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, கணினி சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி பாஸ் புத்தகங்க நகலுடன் நேரடியாகவோ, உழவன் செயலிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News