உள்ளூர் செய்திகள்

கோவையில் தனியார் பள்ளி பஸ்களில் ஆய்வு

Published On 2023-05-31 09:36 GMT   |   Update On 2023-05-31 09:36 GMT
  • 76 தனியார் பள்ளி பஸ்களில் குறைபாடு கண்டறியப்பட்டு, மீண்டும் ஆய்வுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
  • பிரச்சினை இருந்தால் அதனை சரிசெய்து விட்டே வாகனங்களை இயக்க வேண்டும்

கோவை,

போக்குவரத்து துறை, பள்ளி கல்வித் துறை, காவல் துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்பணியை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வை யிட்டார்.

பின்னர், கலெக்டர் கிராந்திகுமார்பாடி பள்ளி வாகனங்களின் டிரைவர்க ளிடம் கூறியதாவது:-

தினந்தோறும் வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

பிரச்சினை இருந்தால் அதனை சரிசெய்த பிறகு தான் வாகனங்களை இயக்க வேண்டும். கோவை மாவட்ட சாலைகளில் அதிக வாகன போக்குவரத்து காரணமாக சில நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் வாகன ஓட்டுநர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக்கூடாது. குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதுதான் உங்களு டைய பொறுப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, மொத்தம் 230 பள்ளிகளைச் சேர்ந்த 1355 தனியார் பள்ளி வாகனங்களில், நேற்று 901 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. இதில், 76 வாகனங்களில் அவசர கால கதவுகள் திறக்காதது, தீயணைப்பு கருவி காலா வதி, காமிரா பொருத்தாதது உள்ளிட்ட குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, 378 வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே, ஊரக பகுதிகளை சேர்ந்த பள்ளி வாகனங்களுக்கு மேட் டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் கூட் டாய்வு நடைபெற்றுள்ளது என்றனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பான், கண்காணிப்பு காமிராக்கள் இருந்தாலும் இக்கட்டான சூழலை எதிர்கொள்ள பயிற்சி பெற வேண்டும். திறமையான, எந்த சூழலையும் சமாளிக்கக் கூடிய டிரைவராக இருக்க லாம். அத்தகைய அதீத நம்பிக்கையில் மொபைல் போன் பேசிக் கொண்டே பஸ்களை இயக்கினால் கவனம் இல்லாமல் டிரைவர் ஓட்டுகிறார் என குழந்தைகள் நினைப்பர். அவர்களுக்கு பயம் ஏற்படும். நமது நடத்தை மிகவும் முக்கியம். அது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். பயத்தை ஏற்படுத்தக் கூடாது.

குழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர் பொறுப்பு. பள்ளிக்குள் சென்று விட்டால் ஆசிரி யர்கள் பொறுப்பு. அதேபோல் பஸ்களில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கு டிரைவர்க ளே பொறுப்பு. பொறுப்பை உணர்ந்து அவரது செயல் கள், நடத்தை, பாதுகாப்பு உணர்வை அளிக்கும் வகை யில் இருக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News