உள்ளூர் செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கும்பகோணம் ஆர்.டி.ஓ பூர்ணிமா ஆய்வு.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் ஆய்வு

Published On 2022-11-13 10:08 GMT   |   Update On 2022-11-13 10:08 GMT
  • மையத்தில் தங்க வைப்பவ–ர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
  • சம்பா நடவு வயலில் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதை பார்வையிட்டார்.

கும்பகோணம்:

திருப்பனந்தாள் அருகே அணைக்கரை அருகே ஒழுகச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படு பவர்களுக்கான பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தையும், அதே ஊரில் வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறும் இடத்தையும் ஆர்.டி.ஓ பூர்ணிமா பார்வையிட்டார்.

அப்போது பாதுகாப்பு மையத்தில் தங்க வைப்பவ–ர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அணைக்கரை விநாயகம் தெருவின் மெயின் சாலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நடவு வயலில் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதை பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து தேப்பெருமாநல்லூரில் நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் அமைய உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கான இடத்தை பார்வையிட்டார். அவருடன் தாசில்தார் சுசீலா, மண்டல துணை தாசில்தார்கள் மனோரஞ்சிதம், விமல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News