உள்ளூர் செய்திகள்

ஆனைமலையில் 217 குவிண்டால் கொப்பரை ரூ.15.43 லட்சத்துக்கு ஏலம்

Published On 2022-12-28 03:44 GMT   |   Update On 2022-12-28 03:44 GMT
  • முதல் தர கொப்பரை 242 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்த பட்சம் ரூ.7,570க்கும், அதிகபட்சம் ரூ.8,185க்கும் விற்பனையாகியது.
  • 2-ம் தர கொப்பரை 211 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.7,350க்கும், குறைந்தபட்சம் ரூ.5400க்கும் விற்பனையாகின.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 85 விவசாயிகள் 453 மூட்டைகளில் கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது.

கடந்த வாரத்தை விட 93 மூட்டைகள் அதிகரித்துள்ளதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்துள்ளார்.

ஆனைமலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது:-

ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 453 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் தரம் பிரித்து கொப்பரை ஏலம் விடப்பட்டது.

முதல் தர கொப்பரை 242 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்த பட்சம் ரூ.7,570க்கும், அதிகபட்சம் ரூ.8,185க்கும் விற்பனையாகியது.

2-ம் தர கொப்பரை 211 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.7,350க்கும், குறைந்தபட்சம் ரூ.5400க்கும் விற்பனையாகின.

7 வியாபாரிகள் 85 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட 93 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குவிண்டாலுக்கு ரூ.70 விலையும் அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 217 குவிண்டால் கொப்பரை ரூ.15.43 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News