உள்ளூர் செய்திகள்

மோகனூர் அருகே வீட்டில் பதுக்கிய 830 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2023-02-13 07:25 GMT   |   Update On 2023-02-13 07:25 GMT
  • பெருமாள் கோவில் மேற்கு தெருவில் உள்ள கருப்பண்ண பிள்ளை என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது, 16 மூட்டைகளில் சுமார் 830 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த மோகனூர் ஆலம்பட்டியை சேர்ந்த கருப்பண்ண பிள்ளை என்பவரை கைது செய்தனர்.

நாமக்கல்:

தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் படி, தமிழக அரசால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்ட அரிசி, மண்ணெண்ணெய் கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குதல் தொடர்பாக ஆங்காங்கே வாகன சோதனை மூலம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கூடுதல் காவல் துறை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் மோகனூர் அருகே வளையபட்டி பகுதியில் ஈடுபட்டனர்.

அப்போது பெருமாள் கோவில் மேற்கு தெருவில் உள்ள கருப்பண்ண பிள்ளை என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது, 16 மூட்டைகளில் சுமார் 830 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த போலீசார், அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த மோகனூர் ஆலம்பட்டியை சேர்ந்த கருப்பண்ண பிள்ளை என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News