உள்ளூர் செய்திகள் (District)
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நாைள கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பவானிசாகர் அணையில் இருந்து வெளிவரும் உபரி நீர் தேசிய கொடி நிறத்தில் காட்சி அளிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

75-வது சுதந்திர தின விழாவையொட்டி மூவர்ணத்தில் ஜொலிக்கும் பவானிசாகர் அணை

Published On 2022-08-14 04:53 GMT   |   Update On 2022-08-14 04:53 GMT
  • பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
  • 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 எட்டி உள்ளது.

சத்தியமங்கலம்:

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 3 நாட்களுக்கு வீடுகள் வணிக நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.

இதனை ஏற்று பொதுமக்கள் வீடுகளிலும், நிறுவனங்கள், கடைகள் முன்பும் தேசிய கொடியை ஏற்றி உள்ளனர். இது போக முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை தமிழ்நாட்டில் 2-வது பெரிய மண் அணை என பெயர் பெற்றுள்ளது.

இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 எட்டி உள்ளது. தற்போது கடல் போல் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

இதனால் விடுமுறை நாட்களான நேற்றும் இன்றும் பவானிசாகர் அணையை பார்க்க ஏராளமான மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பவானிசாகர் அணையின் மேல் மதகுகள் வழியாக வெளியேறும் உபரிநீர் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் வெளியேறும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சியை பார்ப்பதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பவானிசாகர் அணைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதே போல் ஈரோட்டில் முக்கிய இடங்கள், அரசு அலுவலகங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News